முன்பகை காரணமாக வாலிபர் வெட்டிக் கொலை | சென்னையை சேர்ந்த 7 வாலிபர்கள் கைது

141

திருவள்ளூர் அருகே முன்பகை காரணமாக வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 7 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு அருகே பெருமாள்பட்டு பெரியார் தெருவை சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவர் கடந்த 9 ஆம் தேதி தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்த போது, அங்கு வந்த சில மர்மகும்பல் விக்னேஷ்வரனை சரமாரியாக கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், வியாசார்பாடியை சேர்ந்த விக்னேஷ், ராஜ்குமார் உள்ளிட்ட 7 வாலிபர்கள் விக்னேஷ்வரனை முன்பகை காரணமாக கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட ஏழு பேரூம் புழல் மத்திய சிறையில் அடைக்கபட்டனர்.