தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் | விபத்தா? தற்கொலையா? – போலீசார் விசாரணை

144

பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்த இளைஞரின் சடலம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ரயில் நிலையம், கேரள மாநிலம் பாலக்காடு கோட்டத்திற்கு உட்பட்டதாகும். இங்கு பாலக்காடு, கோவை, மதுரை, ராமேஸ்வரம், சென்னை என தினசரி 12 விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இந்த ரயில் நிலையத்தின் 3வது பிளாட்பாரத்தில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபரின் சடலம் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல் நிலைய போலீசார், பிரேதத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். வாலிபர் ரயில் மோதி இறந்தாரா? அல்லது தற்கொலை செய்யும் நோக்கத்தில் இறந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.