தெலுங்கானாவில் கவுரவ கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சர்மா உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தில் நலகொண்டா மாவட்டம் மிரியாலகுடா என்ற இடத்தில் கடந்த 14-ஆம் தேதி, பட்டப்பகலில், பிரனய்குமார் என்பவர் வெட்டி கொல்லப்பட்டார். ரியல் எஸ்டேட் அதிபர் மாருதி ராவ் என்பவர் தனது மகள் அமிர்தவர்ஷினியின் கணவரான பிரனய்குமாரை ஒரு கோடி ரூபாய் கொடுத்து, கூலிப்படை மூலம் படுகொலை செய்தது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

இந்த கவுரவ கொலை வழக்கில், பீகாரில் பதுங்கி இருந்த முக்கிய குற்றவாளியான சர்மா, அம்ருதாவின் தந்தை மாருதி ராவ், அவரின் தம்பி சரவணன், சிவா, அஸ்கர் அலி, முகம்மது பாரி மற்றும் அப்துல் கறீம் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெலுங்கானா போலீசார் தெரிவித்துள்ளனர்.