மேட்டூரில் கண்புரை அறுவை சிகிச்சையால் பாதிக்கப்பட்டு, கோவையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருபவர்களை, அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்

300

சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு கண் மருத்துவமனையில் கண்புரை நீக்கும் போது சிகிச்சை கோளாறால் 15 பேருக்கு கண் பார்வை பறிபோனது. இதையடுத்து அவர்கள் மேல் சிகிச்சைகாக கோவையில் உள்ள கண் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கோவை அரசு மருத்துவக்கல்லூரி பொன்விழாவில் கலந்துக் கொள்வதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் வேலுமணி ஆகியோர் கோவை வந்தனர். பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 8 பேரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக மேலும் அவர்கள் தெரிவித்தனர்.