தேன்கனிக்கோட்டை அருகே தனியார் நிறுவன தொழிலாளி கல்லால் அடித்து கொலை…!

294

தேன்கனிக்கோட்டை அருகே தனியார் நிறுவன தொழிலாளி ஒருவர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார்

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் பிராங்கிளின் அருள்தாஸ் , இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் பிராங்கிளின் தம்முடைய உறவினரான ராம்குமாரை சந்திக்க சென்றுள்ளார். அப்போது மது அருந்திய இருவரும் வாய்தகராறில் ஈடுபட்டுள்ளனர். சண்டை முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ரவிக்குமார் கல்லால் பிராங்கிளினை தாக்கியுள்ளார். இதில், பிராங்கிளின் என்பவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து ரவிக்குமாரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.