பணியின் போது உயிர் தியாகம் செய்த காவலர் முனுசாமியின் மகளுக்கு மருத்துவ இடம்!

257

ஓசூரில் பணியின் போது உயிரிழந்த காவலர் முனுசாமியின் மகளுக்கு, கலந்தாய்வில் மதுரை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் முனுசாமி நகைப்பறிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிகக்ப்பட்ட நபர்களைப் பிடிக்க முயன்றபோது அவர்கள் கத்தியால் தாக்கியதில் உயிரிழந்தார்.
பணியின்போது உயிர்த் தியாகம் செய்ததைக் கருத்தில் கொண்டு அவரது குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்கவும், அவரது மகள் ரக்ஷனாவின் உயர் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்றும் முதல்வர் உத்தரவிட்டார். முனுசாமி, தனது மகளை மருத்துவம் படிக்க வைக்க விரும்பினார். காவலர் முனுசாமியின் மகள் ரக்ஷனா பிளஸ்௨ தேர்வில் ௧,௧௮௨ மதிப்பெண் பெற்று எம்.பி.பி.எஸ் சேர்க்கைக்கு 198.25 கட்ஆப் மதிப்பெண் பெற்றிருந்தார். தரவரிசைப்பட்டியலில் 525 ஆவது இடத்தில் இருந்தார். நேற்று நடைபெற்ற பொதுப்பிரிவினைருக்கான கலந்தாய்வில் அவருக்கு மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்தது.
இது தொடர்பாக அவரது தாய் முனிலட்சுமி கூறுகையில் என் மகளுக்கு சென்னை மருத்துவக் ல்லூரியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். சென்னையில் நண்பர்களும், உறவினர்களும் இருக்கின்றனர். எனவே சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்க கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.