மும்பை துலே பகுதியில் உள்ள டீக்கடையில் வாலிபர் ஒருவரை, மர்ம கும்பல் பட்டப்பகலில் சரமாரியாக வெட்டிக்கொலை…!

533

மும்பை துலே பகுதியில் உள்ள டீக்கடையில் வாலிபர் ஒருவரை, மர்ம கும்பல் பட்டப்பகலில் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், மும்பை துலே பகுதியில் வசித்து வந்தவர் ரஃபீக்குதீன் என்பவர் மீது கற்பழிப்பு, கொலை, என 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள இவர், டீக்கடையில் அமர்ந்து டீ குடித்து கொண்டிருந்தபோது, அங்கு சென்ற 11 பேர் கொண்ட கும்பல், தங்களிடம் இருந்த அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால், 27 முறை, கண்டம் துண்டமாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். நெஞ்சை பதைக்க வைக்கும் இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இந்த நிலையில், பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவம் குறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.