கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி விபத்து..!

232

மும்பையில் சாலையோரம் நின்றவர்கள் மீது மோதிய கார் ஒன்று, சிக்னலில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீதும் மோதிய சி.சி.டி.வி. காட்சி வெளியாகியுள்ளது.

தாராவி பகுதியில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, சாலையோரம் நின்றிருந்த பொதுமக்கள் மீது மோதியது. பின்னர், சிக்னலுக்காக நின்று கொண்டிருந்த கார், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் மீதும் மோதி நின்றது. இதையடுத்து, அந்த காரின் ஓட்டுநரைப் பிடித்து பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர். இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்த நிலையில், அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கார் ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.