மும்பையில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கியுள்ள இருபதுக்கும் மேற்பட்டவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

220

மும்பையில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கியுள்ள இருபதுக்கும் மேற்பட்டவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மும்பையில் தானே நகரில் உள்ள பிவாண்டி பகுதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம் திடீரென்று இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் இருந்து இதுவரை 25-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளநிலையில், மேலும் இருபது பேர் அதில் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. முன்னதாக நகராட்சி நிர்வாகம் , அந்த கட்டிடம் ஆபத்தான நிலையில் உள்ளதாக நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், இந்த விபத்து நடைபெற்றுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற மும்பை தீயணைப்புத்துறையினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, இந்த விபத்திற்கான காரணம் குறித்து தானே போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.