மும்பையில்,தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இன்று பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

899

மும்பையில்,தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இன்று பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் அண்மையில் பெய்த கன மழையை விடவும் தற்போது மிக கனமழை பெய்ய வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் மும்பையின் புறநகர்ப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்துக்கு அதிகபட்ச மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாகவும், அலைகளின் சீற்றம் அதிகரித்து உள்ளதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, மோசமான வானிலை மற்றும் ஓடுபாதை சரியில்லாத காரணத்தால் விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்துவருவதால் பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது