கேரளாவில் ஏடிஎம்-ல் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ரோமன் நாட்டை சேர்ந்தவரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.

332

கேரளாவில் ஏடிஎம்-ல் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ரோமன் நாட்டை சேர்ந்தவரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், திரைப்படங்களை மிஞ்சும் அதிநவீன பாணியில், ஏடிஎம் கார்டுகளின் டாடாக்களை திருடி, பொதுமக்களின் நான்கரை லட்ச ரூபாய் பணம் ஏடிஎம்-ல் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக, சிசிடிவி கேமரா பதிவு மூலம் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு, மகாராஷ்டிராவில் தலைமறைவாக இருந்த கொள்ளையன் கார்பிரியல் மரியனை மும்பை போலீசார் கைது செய்தனர்.
மேலும் 2 ரோமானியர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் கூட்டாளிகளாக ஈடுபட்டிருப்பதாகவும், அவர்கள் 2 பேரும் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் 3 பேரின் விசா கடந்த ஜூலை மாதமே காலாவதியாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.