மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீதின் வீட்டுக்காவல் நீடிப்பு!

298

மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீதின் வீட்டுக்காவல் நீட்டித்து லாகூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பையில் 2008–ம் ஆண்டு நவம்பர் 26–ந் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நுழைந்து நடத்திய பயங்கர தாக்குதல்களில் மூளையாக செயல்பட்டவர், ஹபீஸ் சயீத். தடை செய்யப்பட்ட ஜமாத் உத் தாவா அமைப்பின் தலைவரான இவரும், இவரது கூட்டாளிகளும் பாகிஸ்தான் அரசால் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் லாகூர் உயர்நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கு விசாரணையில் ஹபீஸ் சயீத், அவரது கூட்டாளிகளுக்கு மேலும் 3 மாதம் வீட்டுக்காவலை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டது.