8 வது மாடியிலிருந்து கீழே குதித்து சிறுமி தற்கொலை..!

299

மும்பை புறநகர் பகுதியில் உள்ள அடுக்கு மாடிக்குடியிருப்பின் 8 ஆவது மாடியில் இருந்து சிறுமி கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

மும்பையில் உள்ள மேற்கு காந்திவிலி தாக்கூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த ஹர்சிகா என்ற 14 வயது சிறுமி, 8-வது மாடியிலிருந்து கீழே குதிக்க தயாராகி கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள், அவரை கீழே குதித்து விட வேண்டாம் என கூச்சலிட்டனர். ஆனால் அதைப் பொருட்படுத்தாத சிறுமி கீழே குதித்தார். ரத்த வெள்ளத்தில் துடித்த சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். 9-ம் வகுப்பு படித்து வந்த சிறுமி, தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.