மும்பையில் உள்ள 33 அடுக்கு மாடி கட்டடத்தில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

மும்பையின் வோர்லி பகுதியில் உள்ள 33 மாடி வணிக வளாக கட்டடத்தின் மேல் தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டடத்தின் மேல் தளத்தில் இருந்து அதிக அளவில் புகை வெளியேறி வருவதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

தகவலறிந்து 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். mumbai fire accidentஅடுக்குமாடி கட்டடத்தில் இருந்து இதுவரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்டுள்ள கட்டடத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபலங்கள் வசித்து வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.