சாலையில் ஓடிக் கொண்டிருந்த வாகனத்தில் தீப்பிடித்தது…

254

மும்பையில் மேற்கு விரைவு நெடுஞ்சாலையில் ஓடிக்கொண்டிருந்த கார் திடீரெனத் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பை மாநகரில் இருந்து குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களுக்குச் செல்வதற்கு உதவுவது மேற்கு விரைவு நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலையில் 24மணி நேரமும் பரபரப்பாக வாகனங்கள் ஓடிக்கொண்டிருக்கும். இந்நிலையில் இன்று மேற்கு விரைவு நெடுஞ்சாலையில் ஓடிக்கொண்டிருந்த ஒரு வாகனம் திடீரெனத் தீப்பிடித்தது. இதையறிந்ததும் காரைச் சாலையில் நிறுத்திவிட்டு ஓட்டுநர் கீழிறங்கி உயிர்தப்பினார். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை முழுவதும் கட்டுப்படுத்தினர்.