சிறிய ரக விமானம் நொறுங்கி விழுந்து விபத்து..!

236

மும்பையில் சிறிய ரக விமானம் நொறுங்கி விழுந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

உத்தர பிரதேச அரசுக்கு சொந்தமான இந்த விமானத்தில் 12 பேர் பயணிக்கு முடியும். 5 பேருடன் சென்று கொண்டிருந்த இந்த விமானம், காட்கோபார் பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்ற இடத்தில் நொறுங்கி விழுந்தது. உடனடியாக விமானம் வெடித்து சிதறியதில் அதில் பயணித்த 5 பேரும் தீயில் கருகி பலியாகினர். விபத்து நடந்த மீட்பு பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.