மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

269

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வரலாறு காணாத பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மும்பை நகரம் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. இந்த நிலையில், தெற்கு மும்பையில் உள்ள பிந்தி பஜார் பகுதியில் 3 அடுக்குகளை கொண்ட குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. விபத்தில் இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மீட்புப் பணிகளில் பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு உள்ளனர். 30க்கும் மேற்பட்டவர்கள் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.