157 மேம்பாலங்களை ஆய்வு செய்ய மும்பை மாநகராட்சி உத்தரவு..!

65

மும்பையில் நடைமேம்பாலம் இடிந்து 6 பேர் பலியானதை அடுத்து, 157 நடைமேம்பாலங்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கடந்த வியாழன்று இரவு சத்ரபதி சிவாஜி மகாராஜா ரயில் நிலையம் அருகே இருந்த நடைமேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். அந்த பாலம் நல்ல நிலையில் இருப்பதாக அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.இதையடுத்து மும்பையில் உள்ள 157 பாலங்களின் வலிமை குறித்து மீண்டும் ஆய்வு செய்யுமாறு சிவி கன்ட் கன்சல்டன்ட்ஸ் என்ற நிறுவனத்திற்கு மும்பை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. விரிவான ஆய்வு மேற்கொண்டு ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.