சாலையை வெட்டி சேதப்படுத்தி எம்என்எஸ் அமைப்பினர் போராட்டம்!!

167

மும்பையில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகள சீரமைக்கக்கோரி, மாநில சட்டசபைக்கு வெளியே உள்ள சாலைகளை வெட்டி, சேதப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மும்பையில் கடந்த 2 வாரங்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் ,சாலைகள் குண்டும் குழியுமாக சேதமடைந்து, போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ,வாகனத்தில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். இதுதொடர்பாக, மும்பை பெருநகர மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும், எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, மந்திராலயா எனப்படும் சட்டசபை வெளியே திரண்ட மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா அமைப்பை சேர்ந்த சுமார் பத்து, 12 நபர்கள். கோஷமிட்டபடி சாலையை வெட்டி, சேதப்படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், சாலையை சேதப்படுத்திய எம்என்எஸ் அமைப்பைச் சேர்ந்த 4 நபர்களை கைது செய்துள்ளனர்.