மும்பை–டெல்லி வழித்தடத்தில் அதிவேக டால்கோ ரெயில் சோதனை ஓட்டம்! விரைவில் இயக்க முடிவு!!

367

டால்கோ ரெயில் மும்பை–டெல்லி வழித்தடத்தில் சோதனை முறையில் இயக்கப்படும் என ரெயில்வே வாரிய உறுப்பினர் (எந்திரவியல்) ஹேமந்த் குமார் கூறினார்.
ஸ்பெயின் நாட்டின் அதிவேக ரெயிலான “டால்கோ’ தொழில்நுட்பத்திலான ரெயில் மும்பை– – டெல்லி மார்க்கத்தில் சோதனை முறையில், இப்போதைய ரெயில் பாதையிலேயே, எந்தவித மாற்றங்களோ அல்லது கூடுதல் செலவோ செய்யாமல் சோதனை முறையில் இயக்கப்படும்.
அதிக வேக ரெயில்:
இந்த மார்க்கத்தில் 16 மணி நேரம் இயக்கப்படும் ராஜதானி ரெயிலின் பயண நேரம், “டால்கோ’ தொழில் நுட்பத்தில் 12 மணி நேரமாகக் குறையும் வாய்ப்பு உள்ளது.
மணிக்கு 150 கி.மீ. முதல் 160 கி.மீ. வேகம் வரை ரெயிலை செலுத்தக் கூடிய இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த, ரெயில் பாதை முழுவதும் வேலிகளுடன் கூடிய இருப்புப் பாதை உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். அதன் பிறகே இது சாத்தியமாகும்.
சோதனை ஓட்டம்
மாநிலங்கள் அளவிலான ரெயில் மேம்பாட்டு, கட்டமைப்புப் பணிகளை மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் விரைந்து மேற்கொள்வதற்கான திட்டத்தில் தமிழகம் இன்னும் கையெழுத்திடவில்லை.
ரெயில்வேயின் சரக்குப் போக்குவரத்து வருவாய் குறைந்தது உண்மைதான். ஆனால், இப்போது நிலைமை சீரடைந்து வருகிறது.
ரெயில் நிலையங்களில் பாதுகாப்பை மேம்படுத்த ரெயில்வே பாதுகாப்புப் படைக்கு ஆள் சேர்ப்பு உள்ளிட்ட பணி மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.