மும்பையில் வெள்ளத்தில் பேருந்துகளுடன் பாலம் அடித்து செல்லப்பட்ட சம்பவத்தில் இதுவரை 25 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

262

மும்பை அருகே பிவாண்டி பகுதியில் அமைந்துள்ள 3 மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததையடுத்து, இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிராவின் பிவண்டி மாவட்டத்தில் உள்ள ஹனுமன் தெக்ரி பகுதியில் 3 மாடி கட்டிடம் ஒன்று திடீரென இன்று அதிகாலை இடிந்து விழுந்துள்ளது. முற்றிலுமாக இடிந்து தரைமட்டமான கட்டிட இடிபாடுகளுக்குள் ஒன்பது நபர்கள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மும்பையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், அதன் காரணமாக, பழமையான இந்த 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்திருக்கலாம் என மும்பை போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து மும்பை நிர்வாகம் முன்னதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளநிலையில், பல குடும்பத்தினர் அங்கு தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினரும், மீட்புப்படையினரும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


மும்பையில் வெள்ளத்தில் பேருந்துகளுடன் பாலம் அடித்து செல்லப்பட்ட சம்பவத்தில் இதுவரை 25 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிர மாநிலம் ராய்கட்டில், பாலம் உடைந்து நேரிட்ட விபத்தில், இரண்டு பேருந்துகளும், கார்களும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதையடுத்து, அதில் பயணம் செய்து காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆற்றின் போக்கில் தற்போது 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்று வரும் இந்த தேடும் பணி, 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு விரிவுபடுத்துமாறு மத்திய அரசு, தேசிய பேரிடம் மீட்பு படையினருக்கு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, நேற்று நடைபெற்ற தேடுதல் பணியின்போது, மேலும் 3 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதுவரை மொத்தம், 25 உடல்கள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 23 உடல்கள் அடையாளம் காணப்பட்டுவிட்டன. எஞ்சிய 13 நபர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கு இயன்ற உதவிகளை மத்திய அரசு வழங்கும் என உறுதியளித்துள்ளது.