முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணி தொடர்பான வழக்கை ஜூலை இரண்டாவது வாரத்துக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

213

முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணி தொடர்பான வழக்கை ஜூலை இரண்டாவது வாரத்துக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் தமிழக அதிகாரிகளுக்கு கேரள அரசு இடையூறு செய்வதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அதில், முல்லைப்பெரியாறு அணையை பராமரிக்க தங்களுக்கே உரிமையுள்ளது என்று தமிழக அரசு கூறியிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள் முல்லைப்பெரியாறு அணை பராமரிப்பு தொடர்பான வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளதால் இரு மாநில தமிழகம் மற்றும் கேரள அரசுகள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜூலை இரண்டாவது வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.