புதிய தலைவராக நியமிக்கப்பட்ட அசோக் தலைமையில் கூட்டம் |அணையின் நீர்மட்டம், பராமரிப்பு குறித்து இன்று ஆய்வு

285

முல்லை பெரியாறு அணையின் பராமரிப்பு, நீர்மட்டம் ஆகியவற்றை புதிய தலைவராக நியமிக்கப்பட்ட பி.அசோக் தலைமையில் துணைக் குழுவினர் இன்று ஆய்வு செய்ய உள்ளனர்.
தமிழகத்தில் தேனி மாவட்டம் உட்பட 8 மாவட்டங்களின் நீர் ஆதாரமாக விளங்கும் முல்லை பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க மூவர் கொண்ட குழுவை கேரள உயர்நீதிமன்றம் நியமித்தது. இந்த குழுவின் தலைவராக மத்திய அணைகள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழுவின் தலைமை பொறியாளர் பிஆர்கே பிள்ளை, மத்திய நீர்வள ஆணையர் அம்பர்ஜி மற்றும் தமிழகம் சார்பாக பொறியாளர் மாதவன் உட்பட பலர் நியமிக்கப்பட்டனர். இந்த குழுவினர் கடந்த வருடம் செப்டம்பரில் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். தற்போது அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பொய்த்து விட்டதால், அணையின் நீர்மட்டம் 108 புள்ளி 90 அடியாக குறைந்துள்ளது. இந்தநிலையில், புதிய தலைவராக நியமிக்கப்பட்ட பி.அசோக் தலைமையில், அணையின் பராமரிப்பு, நீர் இருப்பு உள்ளிட்டவைகளை குறித்து இன்று ஆய்வு நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து குமுளியில் நடைபெறும் குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.