முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளது. உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ் பேட்டி.

276

முல்லைப்பெரியாறு அணை வலுவாக உள்ளதாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ் தெரிவித்துள்ளார்.

முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்டும் முயற்சியில் கேரள அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்த முன்னாள் நீர்பாசனத் துறை அமைச்சர் ஜோசப், அணை வலுவாக இருப்பதாக தம்மிடம் கூறியதை சுட்டிக்காட்டினார். இதேபோன்று, கேரளாவில் உள்ள முக்கியத்தலைவர்கள் அணையின் பாதுகாப்பை உறுதிசெய்ததையும் அவர் நினைவுப்படுத்தினார்.
இது தொடர்பாக கேரள அரசின் நிலைப்பாடு குறி்த்து முன்னாள் அமைச்சர் பிரேமச்சந்திரன் தம்மிடம் பலமுறை விவாதித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அணை பலவீனமாக இருப்பதாக பொய்ப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் கேரள அரசு, புதிய அணைக்கட்ட முயற்சித்து வருவதாகவும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ் குற்றம் சாட்டினார்.