முல்லைப் பெரியாறு அணை முழு பாதுகாப்புடன் உள்ளது-தமிழக அரசு!

452

முல்லைப் பெரியாறு அணை முழு பாதுகாப்புடன் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, அணையை பராமரிக்க அனுமதி வழங்க கோரி தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அணை பகுதியில் தமிழக அரசு ஆய்வு செய்ய அனுமதிக்க முடியாது என்றும், முல்லை பெரியாறு அணையை பராமரிக்கும் பணியை தமிழகம் மேற்கொள்ளக் கூடாது என்றும் அந்த மனுவில் கூறப்பட்டது. இந்தநிலையில், முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புடன் இருப்பதாக தெரிவித்துள்ளது. அணையின் உறுதி தன்மை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், அணையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள தமிழக அதிகாரிகளுக்கு அனுமதி வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.