முல்லை பெரியார் அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இரு சக்கர வாகனப் பிரச்சாரம் நடைபெற்றது.

236

தேனி மாவட்டம் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் நீர் ஆதாரமாக உள்ள முல்லை பெரியார் அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும், கண்மாய், குளங்கள், குட்டைகளை தூர்வாரி பாசனத்தை பெருக்க வேண்டும், குடிநீரில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும், என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி குமுளி முதல் தேனி வரை இரு சக்கர வாகன பிரச்சாரம் நடைபெற்றது. கர்னல் ஜான் பென்னிகுயிக் நினைவு மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இரு சக்கர வாகனப் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.கூடலூர், கம்பம், பாளையம் வழியாக தேனி பங்களாமேடு பகுதியில் வாகனப் பிரச்சாரம் நிறைவடைந்ததும், அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.