கேரள முதல்வருக்கு பதில் : முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது

314

முல்லைப்பெரியார் அணையின் நீர் மட்டத்தை குறைக்க தேவையில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு பதிலளித்துள்ளார்.

முல்லைப்பெரியார் அணையின் நீர்மட்டத்தை 36 அடியாக குறைக்கக்கோரும், கேரள முதலமைச்சர் கடிதத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்து எழுதியுள்ள கடிதத்தில், முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளார். 142 அடிக்கு நீர் தேக்கப்பட்டுள்ளதால் முல்லை பெரியாறு அணைக்கு அச்சுறுத்தல் இல்லை என்று கூறியுள்ள முதலமைச்சர் பழனிச்சாமி, முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க தேவையில்லை என தெரிவித்துள்ளார்.