முகேஷ் அம்பானி மனைவி நீதா அம்பானிக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு! 10 கமாண்டோ வீரர்கள் நியமனம்!!

300

புதுடெல்லி, ஜூலை 26
ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானிக்கு மத்திய அரசு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானிக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வி.ஐ.பி களுக்கு வழங்கப்படும் ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் அவரது மனைவி நீதா அம்பானிக்கு மத்திய அரசு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதற்காக குறிப்பிட்ட தொகையை நீதா அம்பானி மத்திய அரசுக்கு செலுத்துவார் என்று தெரிகிறது.
அரசியல் தலைவர்கள் தவிர்த்து இதர நபர்கள் என்ற அடிப்படையில் நாட்டிலேயே முதல்முறையாக கணவன்– மனைவி இருவருக்கும் முக்கிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதை அடுத்து மத்திய ரிசர்வ் படை (சி.ஆர்.பி.எப்) கமாண்டோ வீரர்கள் 10 பேர் சுழற்சி அடிப்படையில் பாதுகாப்பு வழங்குவார்கள். இவர்களுக்கு ஜீப் உள்ளிட்ட வாகனங்களும் வழங்கப்படும்.