டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள மொகல் பூங்காவில் மலர் கண்காட்சிக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

298

டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள மொகல் பூங்காவில் மலர் கண்காட்சிக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள மொகல் பூங்கா உலகப் புகழ் பெற்றதாகும். இங்கு ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு கண்காட்சிக்கான முன்னேற்பாட்டுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சிகப்பு, வெள்ளை நிற ரோஜாக்கள் உள்பட பல்வேறு நிற அமைப்புகள் கொண்ட பலவித மலர்களை தோட்ட பணியாளர்கள் பராமரித்து வருகின்றனர். அழகான பூக்கள் பூத்து குலுங்கும் இந்த மலர் கண்காட்சி பொது மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் 12ம் தேதி தொடங்க இருக்கும் இந்த மலர் கண்காட்சி மார்ச் 19 ஆம் தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது