இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராக முன்னாள் வீரர் MSK.பிரசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

313

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராக முன்னாள் வீரர் MSK.பிரசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
BCCI-யின் 87வது ஆண்டுப் பொதுக் குழு மும்பையில் நடைபெற்றது. சந்தீப் பாட்டீல் தலைமையிலான தேர்வுக் குழுவினரின் பதவிக்காலம் சமீபத்தில் முடிவடைந்தது. இதையடுத்து, இந்திய கிரிக்கெட்டின் தேர்வுக்குழுத் தலைவராக MSK.பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இவர் இந்திய கிரிக்கெட் அணியில் 1998 முதல் 2000 வரை விக்கெட் கீப்பராக விளையாடியவர். 41 வயதான இவர், 6 டெஸ்டுகள், 17 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத், இந்திய ஜூனியர் அணியின் தேர்வுக்குழுத் தலைவராகத் தேர்வாகியுள்ளார். தேர்வுக்குழுவில் தேவங் காந்தி, ககன் கோடா, சரண்தீப் சிங், ஜதின் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.