ஓய்வு முடிவை வெளியிடுமாறு டோனிக்கு நெருக்கடி..!

343

ஓய்வு முடிவை வெளியிடுமாறு நெருக்கடியில் உள்ள இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் டோனி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் விளையாட மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியோடு, தமது ஓய்வு முடிவை டோனி அறிவிப்பார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதனை அறிவிப்பதில் காலதாமதம் செய்து வரும் டோனி, அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பையோடு ஓய்வு பெறலாம் என்று முடிவு செய்துள்ளார். இதற்கிடையே ஓய்வு முடிவை வெளியிடுமாறு, டோனிக்கு கிரிக்கெட் வாரியம் நெருக்கடி கொடுக்கிறது. ஓய்வு முடிவு அறிவிப்பை டோனி வெளியிடவில்லை என்றாலும், அடுத்து வரும் தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என்று கிரிக்கெட் வாரிய நிர்வாகி வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, மூன்று 20 ஓவர், 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி தேர்வு, நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதில் இந்திய கிரிக்கெட் வீரர் டோனி இடம்பெற மாட்டார் என்றும், அவருக்கு பதிலாக இளம் வீரரான ரி‌ஷப்பந்த் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.