காங்கிரஸின் எண்ணம் பலிக்காது என ஆவேசம் – பிரதமர் மோடி

320

அதிகார பசியின் காரணமாகவே மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கட்சிகள் கொண்டுவந்ததாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

மக்களவையில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான எதிர்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி பதிலளித்து பேசினார். அப்போது அவர், பிரதமர் இருக்கையில் யார் அமர வேண்டும் என்பதை நாட்டு மக்களே முடிவு செய்வார்கள் என்றார். காங்கிரஸ் ஆட்சியில் வாங்கிய கடன்களை பா.ஜ.க அரசு அடைத்திருப்பதாக சுட்டிக் காட்டிய பிரதமர் மோடி, கடந்த ஆட்சியைவிட தற்போதைய ஆட்சி பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாக கூறினார்.

குறிப்பாக 13 கோடி இளைஞர்களுக்கு புதிய தொழில் துவங்க கடன் வழங்கியிருப்பதாக சுட்டிக் காட்டினார். தொடர்ந்து பேசிய அவர், பா.ஜ.க அரசை கவிழ்க்க நினைக்கும் காங்கிரஸின் எண்ணம் பலிக்காது என்றும், 2024ஆம் ஆண்டும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸ் கொண்டுவர வேண்டும் என இறைவனிடம் தான் பிரார்த்தனை செய்வதாக பதிலடிக் கொடுத்தார்.