எம்.பி.,க்களின் சம்பளத்தை 1 லட்சம் ரூபாயாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

187

எம்.பி.,க்களின் சம்பளத்தை 1 லட்சம் ரூபாயாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
எம்.பி.,க்களின் சம்பளம் தொடர்பாக பாஜக எம்.பி., யோகி ஆதித்யநாத் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வு முடிவுகளின்படி, எம்.பிக்களின் சம்பளத்தையும், படிகளையும் உயர்த்த குழு பரிந்துரைத்துள்ளது. இந்த குழுவின் அறிக்கையை மத்திய அரசு ஆய்வு செய்த பின்னர், பிரதமர் அலுவலக ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது எம்.பி.,க்களின் சம்பளத்தை 50 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற குழு அறிக்கையை ஏற்க பிரதமர் அலுவலகம் முடிவு செய்துள்ளது. மேலும் எம்.பி.,க்களுக்கு வழங்கப்படும் படிகளையும் உயர்த்தவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.