வால்பாறையில் கனமழையால் மண்சரிவு ஏற்படுவதால் ஆற்றை தூர்வார கோரி பொள்ளாச்சி தொகுதி எம்.பி.யை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறையில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. தேயிலை தோட்டங்களில் மழைநீர் புகுந்ததால், ஏராளமான பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பொள்ளாச்சி தொகுதி எம்.பி. மகேந்திரன் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது அவரை முற்றுகையிட்ட பொதுமக்கள், வாழைத்தோட்டம் ஆற்றை தூர்வாரப்படாததால் தான் வெள்ளம், மண்சரிவுகள் ஏற்படுவதாக தெரிவித்தனர். மேலும் ஆற்றை ஒற்றிய பகுதிகளில் தடுப்பு சுவர்கள் கட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.