மருத்துவமனையில் கருத்தடை அறுவை சிகிச்சை முகாம்

119

மத்தியபிரதேச மாநிலம் மாதோக் என்ற இடத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக வந்த பெண்களை உறவினர்களே தூக்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலம் மாதோக் என்ற இடத்தில் உள்ள ஹால்டாஅரசு மருத்துவமனையில் பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைக்கான மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த முகாமில் பங்கேற்க ஏராளமான பெண்கள் வந்திருந்தனர். பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் அவர்களை கொண்டு செல்ல இழுவை வண்டிகள் இல்லாததால் உதவிக்கு வந்த உறவினர்களே தூக்கிக்கொண்டு மருத்துவமனையின் சிகிச்சை அறைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு வந்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் சிறிது நேரம் அந்த மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.