மத்திய பிரதேசத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

191

மத்திய பிரதேசத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், பயிர்களுக்கு சிறந்த கொள்முதல் விலை அளிக்க வலியுறுத்தியும் மத்தியபிரதேசத்தில் விவசாயிகள் கடந்த ஒன்றாம் தேதி முதல் போராட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் சாலையில் காய்கறிகள் மற்றும் பழங்களைக் கொட்டினர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் வன்முறை வெடித்தது. போலீசார் மீது கற்களை வீசி தாக்கியதுடன், சாலையில் சென்ற வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். இதனையடுத்து போலீசார் விவசாயிகள் மீது திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பலியானோரின் எண்ணிக்கை 6 உயர்ந்துள்ளது.
இதனிடையே, துப்பாக்கி சூடு தொடர்பாக நீதி விசாரண நடத்தவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கவும் அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, மத்திய பிரதேசத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க உள்ளார்.