ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது..!

139

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்திற்கான திரைக்கதையை இயக்குனர் ஏ.எல்.விஜய் எழுதி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. திரைக்கதை எழுதும் பணி முடிந்தவுடன் ஜெயலலிதாவாக நடிக்கும் நடிகை குறித்து ஏ.எல் விஜய் முடிவு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. மூன்று மொழிகளில் வெளியாக உள்ள ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் முதல் பாதி அவருடைய திரையுலக வாழ்க்கை குறித்தும் இரண்டாம் பாதி அரசியல் வாழ்க்கை குறித்தும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விபிரி மீடியா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும், இந்த படத்தின் அறிவிப்பு ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதி வெளிவரும் என கூறப்படுகிறது.