மோட்டார் ரேலி கார் பந்தயம் – எஸ்தோனிய வீரர் ஓட் டேனாக் முதலிடம்

216

சிலியில் நடைபெற்ற மோட்டார் ரேலி கார் பந்தயத் தொடரில், எஸ்தோனிய வீரர் ஓட் டேனாக் முதலிடம் பிடித்தார்.

சிலியில் நடைபெற்ற சர்வதேச மோட்டார் ரேலி கார் பந்தய தொடரில், பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்று, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். கரடு முரடான பாதையில் நடைபெற்ற போட்டியில், மின்னல் வேகத்தில் புழுதி பறக்க பந்தய கார்கள் சென்றன. விறுவிறுப்பான இந்த கார் பந்தயத்தில், எஸ்தோனிய வீரர் ஓட் டேனாக் முதலிடம் பிடித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரான்ஸ் வீரர் செபாஸ்டியன் ஒஜியர் 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். இன்னும் 1 சுற்று எஞ்சியுள்ள நிலையில், பந்தயத்தை வெல்லப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரும் ஆவலை தூண்டியுள்ளது.