ஆந்திர மக்களை பிரதமர் மோடி ஏமாற்றி விட்டதாக தெலுங்கு தேசம் கட்சி குற்றச்சாட்டு..!

503

மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் காரசார விவாதம் நடைபெற்று வருகிறது. ஆந்திர மக்களை பிரதமர் மோடி ஏமாற்றி விட்டதாக தெலுங்கு தேசம் கட்சி குற்றம்சாட்டியது.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில், மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. அதன் மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்று வருகிறது. இதில், பங்கேற்று பேசிய தெலுங்கு தேசம் எம்பி ஜெயதேவ் கலா, ஆந்திரா பிரிவினையின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் என்ன ஆனது? எனக் கேள்வி எழுப்பினார். ஆந்திராவுக்கு நீதி கிடைக்கவில்லை என குற்றம்சாட்டிய அவர், மோடி அரசு மக்களை ஏமாற்றி விட்டதாக சாடினார். நம்பிக்கையில்லா தீர்மானம் மீது தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறும் என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார்.