இறந்த தனது மகனின் உடலை மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கிய தாய் …!

536

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஏழை தாய் ஒருவர், இறந்த தனது மகனின் இறுதிச் சடங்கிற்காக மகனின் உடலை மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கியது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
2 நாட்களுக்கு முன்பாக ஷாஹரி பாய் என்ற பெண்மணியின் மகனான வாமன் வாகன விபத்து ஒன்றில் பலத்த காயமடைந்தார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து மகனின் இறந்த உடலை கிராமத்திற்கு எடுத்து சென்று, இறுதி சடங்குகள் செய்ய அந்த ஏழை தாயிடம் போதிய வசதியில்லை. இதனிடையே மகனின் உடலை தானமாக மருத்துவக் கல்லூரிக்கு வழங்கினால், போதிய பணம் கிடைக்கும் என மருத்துவர்கள் ஆலோசனை கூறினர். இதை ஏற்றுக் கொண்ட அந்த ஏழை தாய், மகனின் இறுதி சடங்கிற்காக உடலை தானமாக வழங்கியது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.