கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிப்பு சிகிச்சை பலனின்றி தாய், மகள் உயிரிழப்பு!

1167

கந்துவட்டி கொடுமையால் நெல்லையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி இரண்டு பேர் உயிரிழந்தனர்.
நெல்லை மாவட்டம், காசிதர்மம் பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து, ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை கந்து வட்டிக்கு கடனாக வாங்கியுள்ளார். வட்டியுடன் சேர்த்து 2 லட்சத்து 34 ஆயிரம் வரை பணம் செலுத்திய பிறகும், கடன் கொடுத்தவர் தொடர்ந்து மிரட்டியுள்ளார். இந்தநிலையில், இசக்கிமுத்து தனது குடும்பத்துடன் வந்த நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கந்துவட்டி தொடர்பாக மனு அளித்தார். நான்கு முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், மனமுடைந்த இசக்கிமுத்து, தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்தார்.
பலத்த காயம் அடைந்த 4 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மாவட்ட நீதிபதி மற்றும் அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று தீக்குளித்த இசக்கிமுத்து மற்றும் அவரது மனைவியிடம் வாக்குமூலம் பெற்றனர். இந்தநிலையில், சிகிச்சை பலனின்றி இசக்கிமுத்துவின் மனைவி சுப்புலட்சுமி, அவரது 4 வயது மகள் மதிசரண்யா இருவரும் உயிரிழந்தனர். family-attempt-self-immolation-at-tirunelvely-district-collector-s-office2-23-1508742555

https://www.youtube.com/watch?v=D1Ul4CY0jqs