பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து மீண்டும் விசாரிக்க சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

326

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து மீண்டும் விசாரிக்க சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் கூட்டுச்சதியில் ஈடுபட்டதாக எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ரேபரேலி சிறப்பு நீதிமன்றம் அத்வானி உள்ளிட்ட 13 பேரை விடுவித்து தீர்ப்பளித்தது. இந்த விடுதலையை எதிர்த்து சிபிஐ தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ஆகியோர் மீதான குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. 2 ஆண்டுகளில் விசாரணையை முடிக்கவும் லக்னோ நீதிமன்றத்துக்கு நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.