துக்க வீட்டில் அழுத பெண்ணுக்கு ஆறுதல் கூறிய குரங்கு..!

335

கர்நாடகாவில் முதியவரின் இறப்பின் போது கதறி அழுதவர்களை குரங்கு ஒன்று கட்டியணைத்து சமாதானம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

கர்நாடகா மாநிலம், நார்கண்ட் பகுதியைச் சேர்ந்த தேவேந்திரப்பா என்ற முதியவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இந்த நிலையில் ஊர் மக்களும் மற்றும் உறவினர்களும் அழுது கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அனுமன் மந்தி வகையைச் சேர்ந்த குரங்கு, வீட்டுக்குள் அழுது கொண்டிந்த பெண் ஒருவரின் தலையை ஆதரவாகத் தடவிக் கொடுத்து கட்டியணைத்து ஆறுதல் கூறியது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.