வெளி நாடுகளுக்கு கடத்த முயன்ற பணம் பறிமுதல்..!

196

சென்னையில் வெளி நாடுகளுக்கு கடத்த முயன்ற பனிரெண்டரை லட்சம் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னையில் இருந்து, பாங்காக் செல்லும் விமானத்தில் செல்வதாற்காக அரியலூரை சேகர் என்பவர் சென்னை விமான நிலையம் சென்றார். அங்கு நடைபெற்ற வழக்கமான, சோதனையில் அவரிடம் ஏழுரை லட்சம் ரூபாய் மதிப்பிலான, வெளிநாட்டுப் பணம் சவுதி ரியால் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோன்று சென்னையில் இருந்து மலேசியா செல்லும் விமானத்தில் செல்ல இருந்த, ரமேஷ்குமார் என்பவரிடமிருந்து, 5 லட்சம் ரூபாய்க்கான இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் பிடிபட்டன.மறைத்து வைக்கப்பட்டிருந்த, வெளிநாட்டு மற்றும் இந்திய பணத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.