தாடி மீசை கொண்ட மோனாலிசா ஓவியம் 5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டது!

303

பாரிஸ் ஓவிய கண்காட்சியில் மோனா லிசாவின் ஓவியம் 5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
பாரிஸில் சோதபே என்ற ஓவிய விற்பனை நிறுவனம் வித்தியாசமான ஓவியங்களின் கண்காட்சியை நடத்தியது. இதில், பல புதிய வித்தியாசமான ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு ஏலம் விடப்பட்டன. இதில், லியனார்டோ டா வின்சியால் வரையப்பட்ட உலகப்புகழ் பெற்ற மோனாலிசா ஓவியத்துக்கு தாடி மீசை வைத்து மறுஉருவாக்கம் செய்யப்பட்ட ஓவியமும் இடம் பெற்றது. மார்செல் டச்சம்ப் என்ற ஓவியரால் வரையப்பட்ட இந்த ஓவியம் பலரை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து இந்த ஓவியம் இந்திய மதிப்பில் 5 கோடி ரூபாய்க்கு ஏலம் போய் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.