இளைஞர்களை குறி வைக்கும் மோமோ சேலஞ்ச் விளையாட்டு..!

224

கொடைக்கானலில் மோமோ சேலஞ்ச் விளையாட்டு குறித்து மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.

தமிழகத்தில் ப்ளூவேல் கேமை அடுத்து மோமோ சேலஞ்ச் என்ற விளையாட்டு அனைவரையும் அச்சுறுத்தி வந்தது. இது போன்ற விபரீத விளையாட்டுகளை யாரும் விளையாட வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டன. இந்நிலையில், மோமோ சேலஞ்ச் விளையாட்டின் தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில், கொடைக்கானலில் ஏராளமானோருக்கு வாட்ஸ் அப் மூலம் மோமோ குறுந்தகவல் வருவதாக தெரிகிறது. இது குறித்து மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.