ஜவஹர்லால் நேருவின் 53-வது நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது அஞ்சலியை செலுத்தியுள்ளார்.

251

ஜவஹர்லால் நேருவின் 53-வது நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது அஞ்சலியை செலுத்தியுள்ளார்.
ஜவஹர்லால் நேரு 1889-ம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ம் தேதி பிறந்தார்.1919-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்த நேரு, மகாத்மா காந்தியுடன் இணைந்து இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். 1923-ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உப்பு சத்தியாகிரகப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் கலந்துக் கொண்ட நேரு பலமுறை சிறை சென்றுள்ளார். ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி நேரு பதவி ஏற்றுக் கொண்டார். 1964-ம் ஆண்டு மே மாதம் 27-ம் தேதி நேரு காலமானார். அதுவரை ஜவஹர்லால் நேரு இந்தியாவின் பிரதமராகப்
பதவி வகித்தார். இந்தியாவின் நீண்ட காலப் பிரதமராக இருந்த நேருவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. பிரதமர் மோடி நேருவின் நினைவு தினத்துக்கு தனது டுவிட்டரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.