மூன்றாண்டுகளை நிறைவு செய்த மோடி தலைமையிலான மத்திய அரசு, நல்லாட்சி வழங்க தவறிவிட்டது என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

377

மூன்றாண்டுகளை நிறைவு செய்த மோடி தலைமையிலான மத்திய அரசு, நல்லாட்சி வழங்க தவறிவிட்டது என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு, மக்களிடையே பிரிவினையை உண்டாக்கி, இடையூறு அளித்து வருவதாக ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தனது தவறுகளில் இருந்து கவனத்தை திசைதிருப்புவதற்காக, கோபம், வெறுப்பை மக்களிடையே விதைத்து வருவதாக கூறியுள்ள ராகுல் காந்தி, இது மக்கள் பிரச்னைக்கு தீர்வாகாது என்றும் தெரிவித்துள்ளார். பாஜகவின் ஆத்திரமும், வெறுப்புணர்வும் வேலைவாய்ப்பையோ, பிரச்சினைகளுக்கு தீர்வையோ அளிக்காது என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர்கள் மீது காழ்ப்புணர்ச்சி இல்லை என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், லாலு மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ஆயிரம் கோடி ரூபாய் பினாமி சொத்தை அவர்கள் இல்லை என மறுக்கவில்லை எனவும், இதே போன்று திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்களின் உறவினர்களிடம் இருந்து பணம் கைப்பற்றப்பட்டது பொய் இல்லை எனவும் தெரிவித்தார். ஊழல் வழக்குகளின் அடிப்படையிலேயே விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.