யோகா பயிற்சி, மனிதர்களுக்கு நல்லொழுக்கத்தைக் கற்றுத் தருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

233

சர்வதேச யோகா தினமான இன்று, குடியரசு தலைவர் மாளிகையில் யோகா பயிற்சி நடைபெற்றது. குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உற்சாகத்துடன் கலந்துகொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டனர்
இதே போன்று, சண்டிகரில் பிரதமர் மோடி தலைமையில், யோகா பயிற்சி நடைபெற்றது. இதில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சிரமமான யோகா பயிற்சிகளைக் கூட, அநாயாசமாக மேற்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி அனவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
யோகா பயிற்சிக்குப் பின்னர் உரையாற்றிய பிரதமர், யோகா பயிற்சியானது, மனிதர்களுக்கு நல்லொழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கிறது. தவிரவும், அனைத்து விதமான கெட்ட பழக்கங்களையும் விடவேண்டும் என்றால் அது யோகாவால் நிச்சயம் முடியும் என்று தெரிவித்தார்.