3 நாள் அரசு முறைப் பயணமாக இஸ்ரேலுக்கு செல்லும் பிரதமர் மோடி.

272

பிரதமர் மோடி இஸ்ரேல், ஜெர்மன் நாடுகளுக்கு 3 நாட்கள் அரசு முறைப்பயணமாக, டெல்லியில் இருந்து இன்று புறப்பட்டு செல்கிறார்.
இஸ்ரேலுடன் தூதரக உறவு ஏற்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை யொட்டி, மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி அந்நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு பிறகு, இந்திய பிரதமர் ஒருவர் அந்த நாட்டுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும். இஸ்ரேலுக்கு முதல் முறையாக செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமருடன் நடத்தும் பேச்சு வார்த்தைக்குப்பிறகு, பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஓப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தெரிகிறது. மேலும், விமான போக்குவரத்து, அந்நிய முதலீடு ஆகியவைகளை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும், தலைவர்கள் சந்திப்பின்போது, ஆலோசனை நடத்தப்பட உள்ளன. இஸ்ரேல் பயணத்தை முடித்துக்கொண்டு, ஜெர்மன் செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடைபெற உள்ள ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.